Thursday, February 23, 2012

கேபிள் தொலைக்காட்சி நடத்தும் நண்பர்கள் கவனத்துக்கு!

உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி நடத்தும் / நடத்தவிரும்பும் / நடத்தப்போகும் நண்பர்கள் கவனத்துக்கு..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லீஸ் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே* இப்போது உங்களுக்குக் கிடைக்கிறது சினிமா காப்பிரைட்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(முன் குறிப்பு:
* 26.02.2012 ஞாயிறு அன்று தினத்தந்தியில் வெளியான விளம்பரத்தைத் தொடர்ந்து, தொலைபேசியில் பேசிய / நேரில் வந்து பேசிய நண்பர்களது பல கருத்துக்களை ஏற்று, திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம். முக்கியமாக.. பதிவுக்கட்டணத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறோம். கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும். மேலும், விவரம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும். ஃப்ரான்சைஸீ எடுத்து நடத்த விரும்புகிறவர்கள், முந்திக்கொள்ளவும். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி! updated on 28.02.2012

* இந்தத் திட்டத்தின்படி காப்பிரைட் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு கடைசி நாள் 13.03.2012 - செவ்வாய்க்கிழமை. அதன்பின்னர், இந்தத் திட்டம் அமலில் இருக்காது. )



The Copyright Act 1972 மற்றும் The Cinematography Act 1952 அடிப்படையில் உலகம் முழுதும் உள்ள கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப எங்கள் வசம் உரிமம் உள்ள சுமார் 1000  தமிழ் திரைப்படங்களை, மாதாந்திர லீஸ் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே* உங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம்.

The Cable Television Networks (Regulation) Act 1995 அடிப்படையில் எங்களுடன் முறையான ஒப்பந்தம் (20 ரூபாய் கோர்ட் பத்திரத்தில்) செய்துகொண்டு,  உங்கள் கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவும்.

ஒப்பந்த காலத்தில் புதிதாக நாங்கள் வாங்கும் திரைப்படங்களின் ஒளிபரப்பு உரிமையும் லீஸ் கட்டணமின்றியே* உங்களுக்கு வழங்கப்படும்.

தவிர, கேபிள் தொலைக்காட்சிகளுக்கென்றே பிரத்தியேகமாக நாங்கள் தயாரிக்கும் புத்தம்புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் இலவசமாகவே / அல்லது சலுகைக் கட்டணத்தில் உங்களுக்கு ஒப்பந்தகாலம் முழுவதும் கிடைக்கும்.

மேலும், ஒப்பந்த காலம் முழுக்க உங்கள் தொலைக்காட்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் கமிஷன் அடிப்படையில் வாங்கித் தரப்படும்.

இன்னும் பலவிதமான - அசத்தலான வியாபார - வர்த்தக  வாய்ப்புகளும் அவ்வப்போது வழங்கப்படும். வாருங்கள்.. சேர்ந்து உழைப்போம்! சேர்ந்தே பலன் பெறுவோம்!

(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நிபந்தனைகளும் மேலான விவரங்களும் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேபிடல் ஜி மீடியா பிரைவேட் லிமிடெட்,
(க்ளிக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனம்), 
ஃப்ளாட் F, இரண்டாவது தளம், சாந்தி நிலையம், 10 / 82 - ஏழாவது அவென்யு, அசோக் நகர், சென்னை 600 083. 
தொலைபேசி : 044 24850833
அலைபேசி : 98410 77789 / 98420 77789 / 99651 93333,
மின்னஞ்சல் : info.capitalg@gmail.com
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாவட்டம்தோறும் எங்கள் சார்பாக செயல்பட அங்கீகாரம் பெற்ற ஃப்ரான்சைஸீக்கள் நியமிக்க இருக்கிறோம். நியாயமான - நிரந்தர வருமானத்துக்கு உத்தரவாதம் உண்டு. ரூ.25 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை ரீஃபண்டபிள் டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும். மாதம் ரூ.10 ஆயிரம் முதல் பல லட்சங்கள்வரை வருமானத்துக்கு வழி செய்து தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் முந்திக்கொள்ளவும். உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினத்தந்தி - 26.02.2012 -ல் வெளியாகியிருக்கும் விளம்பரம்..

* நிபந்தனைகளும் கூடுதல் விவரங்களும் இனி விளக்கமாக...

கடுமையான காப்பிரைட் சட்டம்!
இப்போது உள்ளூர் தொலைக்காட்சிகள் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனால் சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உரிய அனுமதியுடன்தான் திரைப்படங்களை ஒளிபரப்பியாக வேண்டும் என்ற நியாயமான சூழல் உருவாகியுள்ளது. காப்பிரைட் உரிமம் இல்லாமல் திரைப்படங்களை ஒளிபரப்பினால், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதி / லைசென்ஸ் கேன்சல் செய்யப்படலாம். அதுமட்டுமல்ல, இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனைக்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

அருமையான திட்டம்!
எதற்கு இந்த கவலை, கலவரம், தொல்லையெல்லாம்! முறைப்படி சினிமா காப்பிரைட் வாங்கி வைத்துக்கொண்டால் பயமில்லாமல், பாதுகாப்புடன் தொழிலைத் தொடரலாம். அதற்கென அருமையான திட்டம் ஒன்றினைத் தருகிறது ‘கேபிடல் ஜி மீடியா பிரைவேட் லி்மிடெட்’. சுமார் ஆயிரம் தமிழ் திரைப்படங்களின் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை தன் வசம் வைத்திருக்கும் - கடந்த 2004-ம் ஆண்டு முதல் இத்துறையில் செயல்பட்டுவரும் ’க்ளிக்கர்ஸ்’ நிறுவனத்தின் கூட்டாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எங்கள்வசம் தற்போது இருக்கும் சுமார் 1000 படங்களின் ஒளிபரப்பு உரிமை உங்களுக்கு வழங்கப்படும். அதற்கெனெ லீஸ் கட்டணமேதும்* நீங்கள் அளிக்கத் தேவையில்லை. மாறாக, நாங்கள் அளிக்கும் மூன்று நிமிட அளவிலான விளம்பரங்களையும், மூன்று வரி (ஸ்க்ரோல்) விளம்பரங்களையும் உங்கள் தொலைக்காட்சியில் கட்டணமேதும் வாங்காமல் ஒளிபரப்பித் தரவேண்டும். இந்த விளம்பரங்கள், தினமும் குறைந்தபட்சம் 10 முறையாவது உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வேண்டும். ஒளிபரப்பாகும் நேரத்தை முன்கூட்டியே எங்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாதமும், விளம்பரங்கள் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதற்கு அத்தாட்சியாக டெலிகாஸ்ட் சர்டிஃபிகேட்(மாதிரி அனுப்பிவைக்கப்படும்) வழங்க வேண்டும். இருபது ரூபாய் பத்திரம் ஒன்றில் இதற்கென நம் இருவருக்குமிடையே முறையான ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.

கூடுதலாக விளம்பர வருவாய்!
மூன்று நிமிடங்களுக்கும் அதிகமாக அல்லது மூன்று ஸ்க்ரோல் விளம்பரங்களுக்கும் அதிகமாக உங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கென வாங்கிக் கொடுத்து, உங்கள் விளம்பர வருவாயை உயர்த்தித் தரவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒப்பந்தப்படி 3 நிமிட விளம்பரங்களையும் 3 ஸ்க்ரோல் விளம்பரங்களையும் மட்டுமே கட்டணமின்றி நீங்கள் ஒளிபரப்புவீர்கள். அதற்கும் அதிகமாக நாங்கள் வாங்கிக்கொடுக்கும் விளம்பரங்களைப் பொறுத்தமட்டில், உங்கள் ஏஜன்சியாக நாங்கள் செயல்பட்டு, உங்கள் தொலைக்காட்சிக்கு சென்னை, பெங்களூர், கல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்கள் வாங்கித்தர திட்டமிட்டுள்ளோம். உங்கள் விளம்பரக் கட்டண விவரத்தினை ஒப்பந்தம் செய்துகொள்ளும் முன்னதாகவே பேசி, ஒருமனதாக முடிவு செய்துகொள்ளலாம்.

புதிய படங்களும் கட்டணமின்றியே!
இப்போதிருக்கும் ஆயிரம் படங்கள் தவிர, நமது ஒப்பந்தக் காலத்தில் நாங்கள் வாங்கும் புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையும் உங்களுக்கு கட்டணமின்றியே வழங்கப்படும். அதுபோல, நமது ஒப்பந்தக்காலம் முழுவதும் நாங்கள் அளிக்கும் விளம்பரங்களை உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியாக வேண்டும்.

படங்களுக்கான மாஸ்டர் பிரிண்ட்டுகள்
எங்கள் வசம் காப்பிரைட் உரிமை உள்ள படங்களில் ஏறக்குறைய 50 சதவிகிதம் படங்களுக்கு மாஸ்டர் பிரிண்டுகள் கைவசம் இருக்கின்றன. உடனடியாக வேண்டுமெனில் சிடி / டிவிடி மாஸ்டர்கள் கிடைக்கும். அத்தனை படங்களையும் ஹார்ட் டிஸ்க்குகளில் பதிவு செய்து வழங்கவும் முயற்சி எடுத்துவருகிறோம். அதற்கென கட்டணமேதும் வசூலிக்கப்பட மாட்டாது எனினும், ஸ்டுடியோவில் ஆகும் பதிவுக் கட்டணத்தினை - COPYING / RECORDING CHARGES  நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் இருக்கும் எங்கள் ஃப்ரான்சைஸீ அதற்கு உதவும்.

சேவைக்கட்டணம் உண்டு
லீஸ் கட்டணம் பூஜ்ஜியம் என்றாலும் மாதாமாதம் மிகமிகக் குறைவான சேவைக்கட்டணம் உண்டு. அதாவது, உங்கள் சேனலின் ஒளிபரப்புக் கட்டணத்துக்கு ஏற்றாற்போல் ரூ,750/- முதல் ரூ.2,500/- வரையிலான சேவைக்கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஒரு வருட காலத்துக்கான சேவைக்கட்டணத்தை மொத்தமாகச் செலுத்தினாலும் ஏற்கப்படும்.

அ.
ரூ.10,000/- வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சிறிய ஊர்களில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.750/- மட்டுமே!

ஆ.
ரூ.10,001/- முதல் ரூ.25,000/- வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.1,000/- மட்டுமே!

இ.
ரூ.25,001/- முதல் ரூ.50,000/- வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.1,250/- மட்டுமே!

ஈ.
ரூ.50,001/- முதல் ரூ.1 லட்சம்வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.1,500/- மட்டுமே!

உ.
ரூ.1,00,001/- முதல் ரூ.2 லட்சம்வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.1,750/- மட்டுமே!

ஊ.
ரூ.2,00,001/- முதல் ரூ.5 லட்சம்வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.2,000/- மட்டுமே!

எ.
ரூ.5,00,001/- முதல் ரூ.10 லட்சம்வரை ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.2,250/- மட்டுமே!

ஏ.
ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக ஒளிபரப்புக்கட்டணம் (அரசு கேபிள் நிறுவனத்துக்கு / அல்லது தனியார் எம்.எஸ்.ஓ.விற்கு) செலுத்தும் சேனல்களுக்கான மாதாந்திர சேவைக்கட்டணம் ரூ.2,500/- மட்டுமே!

இந்த சேவைக்கட்டணத்துடன் அரசு வரிகள் 10.3 சதவிகிதம் சேர்த்து செலுத்தியாக வேண்டும். இரண்டு மாத கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர், ஒவ்வொரு மாதமும் 3-ம் தேதிக்குள் சேவைக்கட்டணத்தை டிமாண்ட் டிராஃப் மூலம் செலுத்திவர வேண்டும். முதல் கட்டமாக நமது ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு அமலில் இருக்கும் என்பதால், கடைசி இரண்டு மாதங்களின் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அது, முன்பணத்தில் இருந்து வரவு வைத்துக்கொள்ளப்படும்.

12 மாதங்களுக்கான சேவைக்கட்டணத்தை மொத்தமாக ஒரே பேமெண்ட் ஆகச் செலுத்தினால், ஒப்பந்தத்திலேயே ஒரு வருட காலத்துக்கு எங்கள் படங்களின் ஒளிபரப்பு உரிமை எழுதிக்கொடுக்கப்படும்!

பதிவுக்கட்டணம்
சேவைக்கட்டணம் தவிர, ஒரே ஒருமுறை செலுத்தும் பதிவுகட்டணமும் உண்டு. சேனல் ஒன்றுக்கான பதிவு கட்டணம் ரூ.5,000/- (ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே). இந்த பதிவுக்கட்டணத்துடன் 10.3 சதவிகிதம் அரசு வரிகளையும் சேர்த்து டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். பதிவு கட்டணத்தையும் இரண்டு மாத சேவை கட்டணத்தையும் டிமாண்ட் டிராப்ட் மூலம் செலுத்தி, ஒப்பந்தப் பத்திரம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, சுமார் 4 TB அளவுள்ள பாடல் மற்றும் காமெடி காட்சிகள் (சுமார் பத்தாயிரம் பாடல் காட்சிகளுடன்) உங்களுக்குக் கிடைக்கும். வாட்டர் மார்க், லோகோ சேர்க்கப்படாமல் உயர் தரத்துடன் அது இருக்கும். அதற்கென கட்டணமேதும் வாங்கப்பட மாட்டாது.

ஹார்ட் டிஸ்க்-குகளுடன் சென்னை வந்து, நாங்கள் அளிக்கும் அனுமதி கடிதத்துடன் ஸ்டுடியோவுக்குச் சென்று, சம்பந்தப்பட்ட 4 TB அளவுள்ள பாடல் மற்றும் காமெடி காட்சிகளை காப்பி செய்து கொள்ளலாம். அதற்கான ஸ்டுடியோ கட்டணத்தை (COPYING CHARGES - ரூ.500/- முதல் ரூ.1,000 வரை) மட்டும் அவர்களிடம் செலுத்த வேண்டும்.

அல்லது, உங்கள் பகுதிக்கான எங்கள் ஃப்ரான்சைஸீ வசம் இருக்கும் உங்கள் செலவில் நீங்களே காப்பி எடுத்துக்கொள்ளலாம். அதற்கான சேவைக்கட்டணத்தை (ரூ.500/- முதல் ரூ.1,000 வரை) நேரடியாக எங்கள் ஃப்ரான்சைஸீ வசம் செலுத்த வேண்டும்.

முறையான ஒப்பந்தம்
பதிவுக் கட்டணமும், சேவைக்கட்டண முன்பணமும் டிமாண்ட் டிராஃப் மூலம் (CAPITAL G MEDIA PVT LTD, CHENNAI) கிடைத்ததும், ஒப்பந்த நகல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை உங்கள் பெயரில் வாங்கப்படும் 20 ரூபாய் பத்திரத்தில் (இரண்டு காப்பிகள்) பதிவெடுத்து / டைப் செய்து, உங்கள் கையெழுத்திட்டு எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

புத்தம்புதிய நிகழ்ச்சிகள்
கேபிள் தொலைக்காட்சிகளுக்கென பிரத்தியேகமாக நாங்கள் தயாரிக்கும் புத்தம்புது நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே வழங்கவிருக்கிறோம். நிகழ்ச்சிக்கு இடையே விளம்பரம் சேர்த்து, நிகழ்ச்சிகளை இலவசமாகவே கேபிள் தொலைக்காட்சிகளுக்கு வழங்குவதுதான் எங்கள் பிரதான நோக்கமாக இருக்கும். அது இயலாத பட்சத்தில், மிக மிக குறைவான கட்டணமே நிகழ்ச்சிகளுக்கென நிர்ணயிக்கப்படும்.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்
சின்னத்திரை மற்றும் வண்ணத்திரை கலைஞர்களை உங்கள் தொலைக்காட்சியின் அரங்குக்கு நேரடியாக அழைத்துவந்து, சிறப்பு நேரலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுப்போம். அதற்கென உங்களிடம் இருந்து பணம் வாங்காமல், பொதுவான ஸ்பான்சருடனேயே நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடுகிறோம். கலைஞர்களை அழைத்துவருவதற்காக ஆகும் செலவுகளை மெயின் ஸ்பான்சர் மூலம் நாங்கள் ஈட்டித்தருவோம். மற்ற ஸ்பான்சர்கள் மூலம் விளம்பர வருவாய் உங்களுக்கு. சுருக்கமாகச் சொன்னால்.. உங்களுடன் கூட்டு சேர்ந்து நாங்களும் உழைத்து நம் இருவரின் வருவாயையும் பெருக்கிக்கொள்ளவே நாங்கள் திட்டமிடுகிறோம்.

பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள்
மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அங்கிருக்கும் உள்ளூர் தொலைக்காட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து, பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடத்தி, வருவாயினை பகிர்ந்து கொள்ளும் முயற்சிகளையும் செய்யப்போகிறோம்.

ஸ்பெஷல் விளம்பரங்கள்
சின்னத்திரை மற்றும் வண்ணத்திரை கலைஞர்களை நடிக்கவைத்து, உங்கள் ஊர் வியாபார நிறுவனங்களுக்கு விளம்பரப் படங்கள் தயாரித்துக் கொடுக்கவிருக்கிறோம். அதில், உங்கள் பங்களிப்பையும் ஆதரவி்னையும் பொருத்து உங்களுடன் வருவாயை பகிர்ந்து கொள்வோம்.

புதிய திரைப்படங்களின் விளம்பரங்கள்
புதிய தமிழ் திரைப்படங்களை சாட்டிலைட் சேனல்களிலும், பண்பலை வானொலிகளிலும் விளம்பரப்படுத்த பல லட்ச ரூபாய்கள் செலவழிக்கிறார்கள். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் - 7 இடங்களில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு குறிப்பிட்ட பண்பலை வானொலிக்கு மட்டுமே ஒவ்வொரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை செலவழிக்கிறார்கள்.

ஒலியை மட்டுமே கொண்டிருக்கும் வானொலிகளுக்கே இந்த நிலை எனில், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளின் மதிப்பினை நினைத்துப் பாருங்கள்!

வெளியாகும் புதிய திரைப்படங்களின் விளம்பரங்களை தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து கேபிள் தொலைக்காட்சிகளுக்கும் வாங்கித் தரவிருக்கிறோம். அதற்கென குறைந்த பட்ச கட்டணம் வாங்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட படத்தின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி கேட்கலாம். 

தமிழ் திரைப்படங்களை கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் நல்ல முறையில் விளம்பரப்படுத்தி, அதன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் நன்மதிப்பைப் பெற்று, புதிய திரைப்படங்களின் பாடல் காட்சிகளை இலவசமாகவே கேபிள் தொலைக்காட்சிகளுக்கு வாங்கிக் கொடுக்க அனைவருமாகச் சேர்ந்து முயற்சி செய்வோம்.

2004 - ம் ஆண்டிலேயே இந்தப் பணியை கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ உட்பட பல தமிழ் திரைப்படங்களுக்கு திறம்படச் செய்து கொடுத்த அனுபவம் எங்களுக்கிருப்பதால், இம்முறை எல்லோருமாகச் சேர்ந்து வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கிருக்கிறது.

இணையதள வடிவமைப்பு
இது இணைய உலகம், ’இணையத்தைப் பயன்படுத்தாத வர்த்தக நிறுவனங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் காணாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள். ஆனால்.. 90 சதவிகிதத்துக்கும் அதிகமான உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு இணைய தள முகவரி தற்போது கிடையாது, அவை இணையத்தில் செயல்படுவதும் கிடையாது. பிரத்தியேக வெப் டிசைன் மூலம் இணையதளப் பக்கம் வைத்திருப்பது, ஒரு பர்சனல் செகரட்டரி நமக்காக பணிபுரிவதற்குச் சமமாகும். விளம்பரக் கட்டண விவரங்களை அதில் வெளியிடலாம், நிகழ்ச்சி நிரலை வெளியிடலாம், வரிச் செய்தியாக உள்ளூர் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். எல்லாவற்றையும் உங்களுக்கென நாங்களே உருவாக்கி, பராமரிப்பையும் கவனித்துக் கொள்கிறோம். அதற்கென மாதம் ரூ.250/- முதல் ரூ.2,000/- வரை (உங்கள் தேவைக்கேற்ப) சலுகைக் கட்டணத்தில் இந்த சேவையை சிறப்பான முறையில் நாங்கள் செய்து தருகிறோம்.

விளம்பர பத்திரிகை
ஆர்வமுடன் ஒத்துழைக்கும் கேபிள் தொலைக்காட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து, அந்தந்த ஊர்களில் வரி விளம்பரங்களுக்கும் வர்த்தகச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் உள்ள புதிய வார / மாத பத்திரிகைகள் ஆரம்பிக்கவும் இருக்கிறோம்.

வியாபார – வர்த்தக வாய்ப்புகள்
இன்னும் பலப்பல – புதிய வியாபார வர்த்தக வாய்ப்புகளைக் குறிவைத்து களம் இறங்குகிறோம். தரமான உபயோகப் பொருட்களை மார்கெடிங் செய்வது, பஸ்-ரயில்-விமானம்-சினிமா டிக்கெட்டுகளை எளிய முறையில் பயனாளிகளுக்குக் கொண்டு சேர்ப்பது, சுற்றுலா ஏற்பாடு செய்வது.. இப்படி பலவிதமான சேவைகளைச் செய்ய முயற்சிகள் எடுத்துவருகிறோம். கேபிள் தொலைக்காட்சியினை ஒரு சூப்பர் மார்க்கெட் போல செயல்படவைத்து, அதன் மூலம் பலவிதமான பொருட்களை - சேவைகளை மார்கெடிங் செய்து, பலனை பங்கிட்டுக்கொள்ள விரும்புகிறோம். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அவ்வப்போது இவை குறித்து விரிவாகப் பேசி, செயல்படலாம்.

உங்களோடு இணைந்து செயல்பட்டு, உங்கள் வருவாயையும் உயர்த்துவதே எங்கள் முழு முதல் நோக்கமாகும்!

வாருங்கள் சேர்ந்து உழைப்போம்! சேர்ந்தே பலன் பெறுவோம்!!

உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை..

1. பதிவுக் கட்டணத்தை (10.3 சதவிகிதம் வரிகள் சேர்த்து) CAPITAL G MEDIA PVT LTD, CHENNAI  என்ற பெயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் எடுக்கவும்.

2. இரண்டு மாத சேவைக்கட்டண முன்பணத்தை (10.3 சதவிகிதம் வரிகள் சேர்த்து) CAPITAL G MEDIA PVT LTD, CHENNAI  என்ற பெயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் எடுக்கவும்.

3. உடன் உங்கள் தொலைக்காட்சியின் விளம்பரக் கட்டண விவரத்தையும் (ADVT TARIFF CARD), அரசு கேபிள் டிவி வழங்கியிருக்கும் ஒளிபரப்பு அனுமதி கடித நகலையும் இணைத்து, கீழ்க்கண்ட படிவத்தை உங்கள் சேனலின் லெட்டர் ஹெட்டில் நகலெடுத்து, அதைப் பூர்த்தி செய்து, உடனடியாக .எங்களுக்கு அனுப்பி வைக்கவும். முதல் பக்கத்தை மட்டும் லெட்டர் ஹெட்டில் நகலெடுத்தால் போதுமானது. மற்ற பக்கங்களை வெள்ளை தாளிலேயே நகலெடுத்து பூர்த்தி செய்யவும். (பக்கத்தின்மீது க்ளிக் செய்து அதைப் பெரிதாக்கி அதன்பின்னர் அதைப் பிரிண்ட் அவுட் எடுக்கவும்)

ஃப்ரான்சைஸீ நியமனம் முழு வேகத்தில் நடைபெறுகிறது. 7.3.2012-க்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஃப்ரான்சைஸீக்கள் நியமிக்கப்பட்டுவிடும் என்பதால் விருப்பமுள்ளவர்கள் முந்திக்கொள்ளவும். உடனடியாக தொடர்பு கொள்ளவும்.  உங்கள் பகுதிக்கான ஃப்ரான்சைஸி இன்னும் நியமிக்கப்படவில்லை எனில் அதை உறுதி செய்துகொண்டு விரைந்து செயல்படவும். 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை திரும்பப் பெறும் முன்பணம் (ரிஃபண்டபிள் டெபாசிட்) செலுத்த வேண்டியிருக்கும். மாதம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு உத்தரவாதம். திறமையும் சுறுசுறுப்பும் உள்ளவர்கள் பல லட்சம்வரை சம்பாதிக்க இயலும். பகுதி நேரப்பணியாகவே இதனைச் செய்யலாம்.

எங்களிடம் ஒளிபரப்பு உரிமம் உள்ள சுமார் 1000 படங்களில், பெரும்பாலானவற்றை (சுமார் 600 படங்கள்) உலகம் முழுவதும் உள்ள கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம். Perpetual எனப்படும் அதிகபட்சம் 99 வருடங்கள் ஒளிபரப்புவதற்கான சட்டப்பூர்வமான உரிமம் எங்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி தவிர மற்ற இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கேபிள் ஒளிபரப்புச் செய்ய விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் இங்கே டைப் செய்யவும்..